பக்கம்:துளசி மாடம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 துளசி மாடம்


"போதும், தெரிகிறது'- என்கிற பாவனையில் கைய மர்த்திவிட்டு உட்காரும்படி இருவருக்குமே ஜாடை காட்டினார் அவர். கமலி நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவரோ அதே மலர்ந்த முகத் தோடு சரி த்ொடங்கு'- என்பது போலக் கையை அசைத்தார். தயக்கங்கள் இல்லாமல் தடைகள் இல்லா மல் சொல்லி வைத்தது போல் எல்லாம் நடந்தது.

'ஏதோ எனக்கு இருக்கும் குறைந்த ஞானத்தைக் கொண்டு கனகதாரா ஸ்தோத்திரம், ஸொந்தர்யலஹரி, இரண்டையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறேன். பெ ரி ய வ ர் க ள் கேட்டருள வேண்டும் !' -கமலி வேண்டினாள்.

புன்முறுவலோடு அவளை நோக்கி அவர் கையை அசைத்தார். ஒளி நிறைந்த அந்த விழிகளில் ஞானத்தின் நிறைவும் கனிவும் தெரிந்தன. முதலில் சமஸ்கிருத ஸ்லோகத்தையும் அப்புறம் பிரெஞ்சு மொழி பெயர்ப் பையும் அவள் படித்தாள். அவர்களுக்கிடையே ஒரு பல்யமான சாட்சியைப்போல் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரவி.

அங்கே படித்துறைக்கு மேலே பக்தர்களின் கூட்டம் கூடி விட்டது. ஒர் ஐரோப்பியப் பெண்மணி ஸ்பஷ்ட மான- குறையில்லாத உச்சரிப்போடு ஸ்ெளந்தர்ய லஹரி ஸ்லோகத்தைச் சொல்லி, அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் கூறுவதைக் கூட்டத்தினர் நிசப்தமாகக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு அது ஒரு புதிய மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவமா யிருந்தது.

சிற்சில இடங்களில் சைகையாலேயே மறுமுறையும் படி'-என்று தெரிவித்துக் கமலியைத் திரும்பக் கூறச் செய்து கேட்டார் அவர். எப்போது நிறுத்தச் சொல்வி ஜாடை காட்டுகிறாரோ அப்போது நிறுத்திவிடலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/240&oldid=579956" இலிருந்து மீள்விக்கப்பட்டது