பக்கம்:துளசி மாடம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 துளசி மாடம்


“என் தலையை உருட்டனும்கிறதுக்காகவோ என்னவோ எல்லாப் பேப்பர்லியும் கொட்டை எழுத்திலே பெரிய நியூசாப் போட்டுட்டா இதை, சாதாரணமா எத்தனையோ கேஸ் சப்கோர்ட்டிலே வரது. அதை எவ்லாம் நியூஸாப் போடறதில்லே..."

'உம்ம தலையை உருட்டனும்னு பேப்பர்காராளுக்கு ஒண்ணும் இராது. வெள்ளைக்காரி கோவிலுக்குள்ளே நுழைஞ்சிட்டாள்"ன்னு வழக்குன்னா அதுலே ஒரு சென்சேஷன் இருக்கோல்லியோ. அதுனாலே பெரிய நியூலாப் போட்டிருப்பா."

'நண்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருக்கிற புள்ளி களிலே ரெண்டொருத்தர் அந்தந்தக் கோவில்களோட தர்ம கர்த்தாக் குழுவிலேகூட இருக்கா, அதுனாலே, அர்ச்சகாள், குருக்கள், எல்லாம் கூட வேணும்னே பயந்துண்டு நமக்கு எதிரா சாட்சி சொல்லலாம்."

"இந்த ரெண்டு கோயில்லேயும் கமலி தரிசனத்துக்குப் போன்ப்போ இருந்த அர்ச்சகாள் யார் யாருன்னு: நினைவிருக்கோ சர்மா ?” -

கமலி கோவிலுக்குப் போறப்போ எல்லாம் உங்க பொண் வசந்தியோ, ரவியோ, அல்லது பாருவோ கூடத் துணைக்குப் போயிருக்கா. அவாளைக் கேட்டா அந்த சமயத்திலே அர்ச்சகா யார் யார் இருந்தான்னு தெரிஞ் கண்டுடலாம். அது ஒண்னும் பெரிய சிரமமில்லே-'

உடனே தெரிஞ்சுண்டு வந்து சொன்னிர்னா அந்த அர்ச்சகாளைக் கொஞ்சம் வரவழைச்சுப் பேசலாம், கேஸ் நமக்குச் சாதகமா முடிபறத்துக்கு ரொம்ப உபயோகப்படப் போற விஷயம் இது."

"இன்னிக்கே விசாரிச்சுச் சொல்லிடேறன். வேற சாட்சி ஏதாவது வேனுமா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/266&oldid=579982" இலிருந்து மீள்விக்கப்பட்டது