பக்கம்:துளசி மாடம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 25


கொண்டு போய் விடாமல் வசந்தி அங்கேயே வைத்தி ருந்த ஆல்பத்தைக் கையிலெடுத்து மீண்டும் அவரே பார்க்கத் தொடங்கினார். சர்மா கவனித்து விடாமல் வசந்தியும் அவள் அப்பாவும் ஒருவரை ஒரு வ ர் குறிப்பாகப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண் டார்கள். வசந்தி பழையபடி தன்னுடைய ரன்னிங் காமெண்ட்ரி'யைத் தொடர்ந்தாள்.

இது ஜெனீவா லேக்-கரையிலே நின்லு மணிக் கணக்காப் பார்த்துண்டிருக்கலாம். எ ன க் கு இது ரோம்பப் பிடிச்ச இடம் மாமா !” -

பெரியதாய்க் கிண்ணம் கிண்ணமாய்ப் பூத்திருந்த பூக்கள் நிறைந்த ஒரு பெரிய பூங்காவில் ரவியும் கமலியும் நிற்கிறாற்போல ஒரு படம் ஆல்பத்தில் வந்தது. சர்மா வினவினார்:

'இதென்ன பூம்மா ? இத்தனை பெரிசா.இத்தனை அழகா...?"

"அது துலிப் பூன்னு ஹாலந்திலே ரொம்பப் பிரசித்தம் மாமா. துலிப்ஃபெஸ்டிவல்லு அது நிறையப் பூக்கிற காலத்திலே அங்கே ஒரு விழாவே கொண்டாடுவா.

ஆல்பத்தில் அடுத்த படம் திரும்பியது. "இதென்ன இடிஞ்ச மண்டபமா...? அரண் மனையா...?”

அக்ரோ-டோலிஸ்’னு கிரீஸ் நாட்டின் தலை நகர் ஏதென்ஸிலே இது பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் மாமா !”

"அப்போ அவனும், இவளுமா ஐரோப்பா பூராவும் சுத்தியாச்சுன்னு சொல்லு..."

"ரெண்டு பேரும் தனியாத்தானே இதெல்லாம் சுத்தி யிருக்கா...? இல்லியா...?"

۶ - سیمیسی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/27&oldid=579743" இலிருந்து மீள்விக்கப்பட்டது