பக்கம்:துளசி மாடம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 துளசி மாடம்


அன்றைக்கு எதிர்த்தரப்பு வக் கீ ல் என்னென்ன சாட்சியங்களை விசாரிப்பார்-வழக்கை எ ப் ப டி. எப்படித் திரித்துக் கொண்டு போக முயலுவார் என்பதை எல்லாம் அப்போதே வேணுமாமாவால் ஒரளவு அதுமானம் செய்து கொள்ள முடிந்திருந்தது. சப்-ஜட்ஜ் கூறியது போல் எதிர்த்தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து வகையாக மடக்கலாம் என்ற நம்பிக்கையோடு அதற்கு இசைந்து அமர்ந்தார் அவர்.

வழக்கு எப்படிப் போகிறதென்று அறியும் ஆவ லுடன், கமலி, சர்மா, ரவி, வசந்தி எல்லாரும் அங்கே கோர்ட்டில் வ ந் து அமர்ந்திருந்தார்கள். பொது மக்களும் முதல் நாள் போலவே அன்றும் கூட்டமாக வந்திருந்தார்கள்.

இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் எதையும் கமலி அறியாதவள் என்பதை நிரூபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது போல் அமைந்திருந்தது முதல் சாட்சி.

சிவன் கோவில் பிரதான வாயிற் காவற்காரரான முத்து வேலப்ப சேர்வை என்பவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை கமலி காலில் செருப்புக்களுடன் கோயிலில் நுழைந்ததாகச் சாட்சிய மளித்தார். அது நிர்ப்பந்தித்து வற்புறுத்தி வலுக் கட்டாயமாகத் தயாரித்த சாட்சி என்பது முதலிலேயே தெளிவாகத் தெரிந்தது.

வேணுமாமா அந்தக் கோயில் வாட்ச்மேனைக் குறுக்கு விசாரணை செய்தார். முதலில் அது நடந்த நாள் நேரம் முதலியவற்றை மறுபடி விசாரித்தார். வாட்ச் மேன் அதற்குப் பதில் கூறியபின்,

"அப்படித் தரிசனத்துக்கு வந்தபோது கமலி தனியாக வந்தாளா ? வேறு யாரும் உடன் வந்தார்களா?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/282&oldid=579998" இலிருந்து மீள்விக்கப்பட்டது