பக்கம்:துளசி மாடம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 துளசி மாடம்


சங்கரமங்கலம் சிவன் கோவிலில் பிரதம அர்ச்சகரா யிருந்தார் அவர்.

அவர் சாட்சிக் கூண்டில் ஏறிக் கடவுள் சாட்சியாக உண்மை பேசுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்த போது வேணுமாமா, சர்மா எல்லாருக்குமே மிகவும் வேதனையாயிருந்தது. இத்தனைப் பெரியவர், இவ்வளவு: படித்தவர் பொய்ச் காட்சி சொல்லத் துணிந்து வந்து விட்டாரே என்று உள்ளுற மனம் வருந்தினார்கள் அவர்கள்.

“அந்தப் பிரெஞ்சுப் பொண்ணுக்கு நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் தெரியாததோட அதை எல்லாம் அவ கொஞ்சமும் மதிக்காதவள்னும் தெரியற ஆ1. நான் சுவாமி சந்நிதியிலே அவளுக்குக் குடுத்த 'விபூதிவில்வதளம்' எல்லாத்தையும் அவ உடனே காலடியிலே போட்டு மிதிச்சதை என் கண்ணாலேயே பார்த்தேன்"என்று சாட்சியம் அளித்தார் கைலாசநாதக் குருக்கள்.

"குருக்களே ! நீங்க இதை மனப்பூர்வமாகத்தான். சொல்றேளா ? அல்லது ஏதாவது நிர்ப்பந்தத்துக் தாகவுா ?"

-வேணுமாமா இப்படிக் கேட்கத் தொடங்கியதை எதிர்த்தரப்பு வக்கீல் ஆட்சேபணை செய்தார்.

அடுத்து மேலும் இரண்டு அர்ச்சகர்கள் இதேபோல் கமலி கோயில் முறைகளுக்குப் பு ற ம் பக நடந்து கொண்டதாகவும், கோயி ல் பிரகாரத்தில் விவரந்: தெரியாமல் அவள் அப்பிரதட்சணமாகச் சுற்றியதாகவும். சாட்சியம் அளித்தார்கள்.

- "அப்படிப் பிரகாரத்தில் சுற்றும்போது அ வ ள் தனியாயிருந்தாளா ? வேறு யாராவது கூட இருந்தார் களா? எந்தத் தேதியன்று என்ன நேரத்தில் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/284&oldid=580000" இலிருந்து மீள்விக்கப்பட்டது