பக்கம்:துளசி மாடம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 297


சொன்னாராம் கைலாசநாதக் குருக்கள். அவர் தன்னாத் திலே வந்து சொன்னதை இரகசியமா டேப் ரெக்கார்டுலே பதிவு பண்ணி வச்சுண்டிருந்து கோர்ட்டிலே ஜட்ஜுக்குப் போட்டுக் காமிச்சிப் பொய்ச்சாட்சி'ன்னு வாதாடிகுருக்களோட மானத்தை வாங்கிப்பிட்டாராம் அந்த வேணுகோபாலன்.'

'பின்னே என்ன பாட்டீ ? அத்தனை வயசானவர், கோவில்லே சுவாமியைத் தொட்டுப் பூஜை புனஸ்காரம் லாம் பண்றவர், வாய் கூசாமக் கூண்டிலே ஏறிச் சத்தியம் பண்ணிட்டுப் பொய் சொல்லலாமோ ?'

'பொய் சொன்னதோட மட்டுமில்லாமே கமலியும் ரவியும் கோவில்லேயே என்னமோ அசிங்கமா நடந்துண் டான்னு வேற கதை கட்டி விட்டாளாம்.டீ காமு !'

'கேஸ் எப்பிடி ஆகும்னு ஊர்ல பேசிக்கிறா பாட்டி ?”

'உனக்கெதுக்குடி அம்மா இப்போ அந்தக் கவலை ? ஏற்கெனவே அரை உடம்பாப் போயிட்டே, கிழிச்சுப் போட்ட நாராப் படுத்த படுக்கையா இருக்கே. இந்தக் கவலை வேற எதுக்கு ? நோக்கு இருக்கற கவலை போறாதோடி ?”

"கவலையில்லே ... தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேக்கறேன்.'

‘'வேணுகோபாலனும் உங்காத்துக்காரரும் கேலைப் பத்தியே கவலைப்படாமே தங்களுக்கு ஜெயிச்சுடும்கற நம்பிக்கையோட கலியாண காரியங்களைக் கவனிச்சுண்டி ருக்காளாம். இன்னிக்குக்கூட வேணுகோபாலனாத்துலே சுமங்கலிப் பொண்டுகள் பிரார்த்தனையாம். அவரோட சொந்தப் பொண்ணோட கலியாணத்துக்கு முந்தி எப்பிடி சுமங்கலிப் பொண்கள் பிரார்த்தனை பண்ணறதுண்டோ அப்பிடியே இந்த வெள்ளைக்காரி கலியாணத்துக்கும் கூடப் பண்ணியாறதாம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/299&oldid=580015" இலிருந்து மீள்விக்கப்பட்டது