பக்கம்:துளசி மாடம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 303


வாகவே தோன்றி வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நியாயமாகவும் செம்மையாகவும் உள்ளதுடன் சத்திய பூர்வமாகவும் தென்படுகிறன. அவள் நுழைந்ததனால் ஆலயங்கள் பரிசுத்தம் கெட்டு விட்டன என்று ஆட்சேபிப் பவர்களின் பரிசுத்தம்தான் இங்கே சந்தேகத்துக்கு இட மானதாகத் தெரிகிறது.

சொல்லப்போனால் சாட்சியங்களிலிருந்தும், விவரங் களிலிருந்தும் உள்ளுர் இந்துக்களைவிட அதிக பக்தி சிரத்தையுடனும், முறையுடனும், து.ாய்மையுடனும் அவள் இந்துக் கோவில்களில் சென்று வழிபட்டிருப்பதாகத் தெரி கிறது. ஆகவே கோவில்களில் எந்தப் பரிசுத்தமும் எந்தப் புனிதத் தன்மையும் இதனால் கெட்டுவிடவில்லை. இக் காரணங்களால் இவ் வாழக்கை தான். தள்ளுபடி செய்கி றேன்"- என்று தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. தீர்ப் பில் பிரதிவாதிகளாகிய கமலி சர்மா முதலியோருக்கு வாதிகள் உரிய செலவுத் தொகையைத் தரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது- எதிர்பார்த்ததுதான் என்றாலும் வேணுமாமா உற்சாகமாக முகமலர்ந்து, "பார்த்திரா ? இந்தத் தீர்ப்பைத்தான் நான் எதிர்பார்த் தேன்" என்றார் சர்மாவிடம். ரவி ஓடிவந்து வேணுமாமா வைப் பாராட்டிக் கை குலுக்கினான். கமலி மனப்பூர்வ மாக நன்றி சொன்னாள். அன்றைய மாலைச் செய்தித் தாள்களுக்கும் அடுத்த நாள் காலைச் செய்தித் தாள்களுக் கும் இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. சீமா வையர் கோஷ்டி, தீர்ப்பைக் கேட்டபின், “கலி முத்திப் போச்சு ! உலகம் நாசமாத்தான் போகப் போறது. உருப் படப் போறதில்லை'- என்று வயிற்றெரிச்சலோடு சொல்லத் தொடங்கியிருந்தது பழிவாங்கும் வேலை, கமலி- ரவி கல்யாணத்துக்குப் புரோகிதர், சமையற்காரர் கள் கிடைக்காதபடி செய்வது ஆகிய சில்லரைக் குறும்பு களில் உடனே ஈடுபட்டார் சீமாவையர். புரோகிதர்களை எல்லாம் அவரால் தடுத்துவிட முடிந்தது.

"ஒய் ஜம்புநாத சாஸ்திரி ! இன்னிக்கு வேணுமாமா பணத்தை வாரிக் குடுக்கப் போறார்னு சாஸ்த்ரோக்தமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/305&oldid=580021" இலிருந்து மீள்விக்கப்பட்டது