பக்கம்:துளசி மாடம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 இ துளசி மாடம்

முடிகிறது. நேர் எதிர் இலட்சியங்களுள்ள சர்மாவும், இறைமுடிமணியும் நெருங்கிய நண்பர்களாகப் பழக முடி கிறது.

நம்மைச் சுற்றி உலகெங்கும் Transfer of values' மதிப்பீடுகளின் மாறுதல்) மதங்களையும், சமய நம்பிக் கைகளையும் பூர்வீகமான கலாசாரப் பழக்க வழக்கங் களையும் மெல்ல அசைத்துக் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒருவகையில் ஓரிடத்திலிருந்து பெருகும் நீர்ப் பெருக்கு மற்றோரிடத்தில் சென்று தவிர்க்க முடியாத படி நனைந்து 1ாய்ந்து பரவுவது போல் கலாசாரப் பரிமாற்றம் (Cultural Exchange) அல்லது கலாசார மடை tort ppijá6T (Cultural transformation) gsaol- QL fi) m6;. கொண்டுதான் இருக்கின்றன. அதை யாராலும் அழித்து விடமுடியாது.

இக்கதையில் கமலியும், ரவியும் அந்தக் கலாசாரப் பரிமாற்றங்களின் சின்னங்களே. ஆயிரம் வேறுபாடு இருந்தாலும் பாசமும் அரவணைத்து ஏற்றுக் கொள்வ. துமே முடிவாக இந்தியத் தாய்மார்களின் நிறைவான பண்பு என்பதைத் தன் வாழ்விலும், மரணத்திலும் ஒரு. சேர நிரூபிக்கிறாள் காமாட்சியம்மாள்.

பண்பாடு என்பது பரவலாகும்போது வெறும் G5ĝu siswil–urtarů Ljársin (Nationnl Identity) ##18 "மானிடம் என்ற சர்வ தேசிய அடையாளம் (Inter. national identity) உடனே வருகிறது. இந்தக் கதை சங்கர மங்கலம்' என்ற ஒரு சின்னக் கிராமத்தில் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அந்தக் கிராமத்தைவிடப் பரந்த உலகத்தைப் பாதிப்பவர்கள், பாதித்த்வர்கள், பாதிக்கப் போகிறவர்கள்.

(நிறைந்தது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/338&oldid=580054" இலிருந்து மீள்விக்கப்பட்டது