பக்கம்:துளசி மாடம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 துளசி மாடம்


சர்மா சொன்னார் : 'நல்லவேளையாக இந்த மாச முதல் தேதியிலேயிருந்து ரயில் காலம்பர அஞ்சே முக்கால் மணிக்கு வரது. முன்னாடி எல்லாம் மூணே முக்கால் மணிக்கோ நாலு மணிக்கோ வந்துண்டிருந்தது. போக வர ரொம்ப அசெளகரியமாயிருந்தது."

'மாமி, குமார், பார்வதி எல்லாரும் ஸ்டேஷனுக்கு நம்மோட வராளோல்லியோ?"

'குமாரும் பார்வதியும் வரா. அவதான் வராளோ இல்லியோ, தெரியலே. வெள்ளிக்கிழமை வேறே. அவளுக்கு ஏகப்பட்ட பூஜை புனஸ்காரம்லாம் இருக்கும்." 'ஒரு நாளைக்கு அந்தப் பூஜை புனஸ்காரத்தை எல்லாம் சீக்கிரமா முடிச்சுட்டு வரட்டுமே...? தூர தேசத் திலேருந்து இத்தனை வருஷத்துக்கப்புறம் பிள்ளை வர போது அம்மா ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்க வேண்டாமோ?"

நான் சொல்லிப் பார்க்கிறேன். ஆனா அவ வரது சந்தேகம்னு படறது எனக்கு."

'நீர் பேசாமே இரும். நான் காலம்பர நாலு மணிக்கு வசந்தியைக் காரிலே அனுப்பி மாமியைச் சரிக் கட்டறேன்.”

இவை ரவி சங்கரமங்கலம் வருவதற்கு முந்திய தினத்தன்று இரவு வேணுமாமாவும் சர்மாவும் பேசிக் கொண்டவை.

மறுநாள் அதிகாலையில் சர்மா நாலு நாலரை மணிக்கே தயாராகி விட்டார். கிராமத்தில் அங்கங்கே கலியாண முகூர்த்தங்கள் இருந்ததால் நாதஸ்வர இன்னிசையும் வைகறையின் குளிர்ந்த காற்றும் மேற்கே மலையில் சாரல் பிடித்திருந்ததால் பன்னீர் தெளிப்பது போல் பெய்து கொண்டிருந்த பூந்துாற்றலுமாக இருந் தது. அந்தக் காலை வேளை. காமாட்சியம்மாளை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போக வசந்தி காருடன் வந்து முயற்சி செய்தும் பலிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/66&oldid=579782" இலிருந்து மீள்விக்கப்பட்டது