பக்கம்:துளசி மாடம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73


ஒதுங்கினாற் போலவும் விலகி ஒதுங்கி நின்று விட்டாள், கூச்சமா, அல்லது கோபமா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

"அப்படியே மாடிக்கு அழைச்சுண்டு போ... நீங்க தங்கிக்கறதுக்கு அங்கே எல்லா ஏற்பாடும் பண்ணியிருக் கேன்" என்று ரவியிடம் சொன்னார் சர்மா.

"ஏற்பாடென்ன வேண்டிக் கிடக்கிறது ? இருக்கிற இடத்திலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே ? கமவிக்குன்னு தனி செளகரியம் எதுவும் வேண்டியதில்லே அப்பா !”

“யெஸ் ! ஐ ஆம் டயர்ட் ஆ. . லக்சுரீஸ்... அண்ட் மணி ஹெட்டெட் லை.. ப்"- என்று கமலியும் ரவியோடு சேர்ந்து சொன்னாள்.

ஆனாலும் சர்மா சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி ரவி-கமலி சம்பந்தப்பட்ட பெட்டிகள், சாமான்கள் எல்லாம் மாடியிலேயே கொண்டுபோய் வைக்கப் பட்டன. முதல் நாளே வசந்தி சொல்லியிருந்ததால் குமார் தன் கல்லூரிக்கும் பார்வதி பள்ளிக்கூடத்திற்கும் அன்று லீவு போட்டிருந்தார்கள். வசந்தியும் கூட இருந்தாள்.

"சிரமப்பட்டு இதெல்லாம் எதுக்குப் பண்ணினேன் அப்பா ? மோட்டார்-ஒவர் ஹெட் டேங்க்-அட்டாச்டு பாத் ரூம்-டைனிங் டேபிள்...இதெல்லாம் வேணும்னு நான் எழுதலியே ? கமலி ரொம்ப . .ப்ளெக்ஸிபிள டைப்... இருக்கிற வசதிக்கு ஏத்தாப்பில எங்கேயும் அட்ஜஸ்ட் பண்ணிக்க அவளால் முடியும்..."

"இருந்தாலும் முறை - மரியாதை - நாகரிகம்னு இருக்கே என்னாலே முடிஞ்சதைப் பண்ணினேன். வேனுமாமாவும் வசந்தியும் கூடச் சில யோசனைகள் சொன்னா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/75&oldid=579791" இலிருந்து மீள்விக்கப்பட்டது