பக்கம்:துளசி மாடம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 துளசி மாடம்


உடையணிந்து நடப்பது எப்படி எதிர்கொள்ளப்படும் என்று தயக்கத்தோடு நினைத்துப் பார்க்கவும் அவனால் முடிந்தது. - ஊர் இருக்கட்டும்! இந்த வீட்டில் அம்மாவும் அப்பாவுமே என்ன நினைப்பார்கள்? - எ ன்று எண்ணியது அவன் மனம். அவனைப் பொறுத்தவரை யில் இந்தக் கோலத்தில் அப்படியே வாரி அணைத்துக் கொள்ள் வேண்டும்போல அத்தனை அழகாயிருந்தாள் கமலி. மனம் தயங்கினாலும் அவளிடம் அதைப்பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை.

அவளையும் அழைத்துக்கொண்டு கூப்பிடுவதற்கு வநதிருந்த தங்கை பார்வதியோடு பூஜைக்கு வந்திருந் தான் ரவி. -

அம்மாவும் அவன் மேல் பிரியமாயிருக்கிறாள். கமலியோ அவன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். ஆனால் அம்மாவுக்கும் கமலிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறு மோதல் கூட வந்துவிடாமல் தடுக்க வேண்டுமே என்று அவனுக்குக் கவலையா யிருந்தது. பூப்போன்ற மனமும், இங்கிதமான குணமும் உள்ள கமலியால் எந்தத் தகராறும் வராது என்பதை அவன் அறிவான். அம்மாவைப் பற்றித்தான் அவனுக்குக் கவலையாக இருந்தது. பால் குடிக்கிற வயதிலிருந்து ஒர் ஆனால் பிரியம் செலுத்தப்படுகிற ஒரே பெண் முதலில் தாய்தான். வயதும் பருவமும் வந்தபின் ஆணின் அந்தரங்க அபிமானமும் பிரியமும் இன்னொரு யுவதியிடம் போகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மகனின் பிரியத்தைக் கவர்ந்து விட்ட அந்தப் புதிய யுவதியின் மேல் தாய்க்கு ஏற்படுகிற இரகசியமான பொறாமைதான் மாமியார் மருமகள் சண்டையின் ஆரம்பமோ என்று எண்ணினான் ரவி. இவ்வளவிற்கும் 'இவள்தான் உன் மருமகள்' என்பதாக அம்மாவிடம் யாரும் இன்னும் அதிகாரபூர்வ மாகச் சொல்லவில்லை. அம்மாவாகக் கமலியைப் ப ற்றிச் சந்தேகப்படுகிறாள் ; அவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/90&oldid=579806" இலிருந்து மீள்விக்கப்பட்டது