உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

15

செல்லூர் துளு நாட்டு வரலாறு 15 மருதன் இளநாகன் என்னும் புலவர் இவ்வூரை கூறுகிறார். மழுவாள் நெடியோனாகிய பரசு ராமன் இவ்வூரில் யாகம் செய்த கதையை இவர் கூறு கிறார். (இணைப்பு 2 காண்க) "கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக் கயிறரை யாத்த காண்டகு வனப்பின் அருங்கடி நெடுந்தூண்'* என்பது அப்பாட்டில் இச்செய்தியைக் பகுதி. கூறும் இந்தச் செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருந் தது என்றும் அவ்வூருக்குக் கிழக்கில் கோச ருடைய நியமம் (ஊர்) இருந்தது என்றும் இப்புல வரே இன்னொரு செய்யுளில் கூறுகிறார். "அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர் நியமம்" என்று இவர் கூறுகிறார்.

எனவே, துளுநாட்டுச் செல்லூரில் பரசுராமன் செய்த வேள்விக்கு நினைவாக ஒரு தூண் அமைக் கப்பட்டிருந்த தென்றும், அச்செல்லூர் கடற் கரைக்கு அருகில் இருந்ததென்றும் தெரிகின்றன.

  • அகம். 220 : 3-8
    • அகம். 90: 9-12