உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

துளு நாட்டு வரலாறு

16 துளு நாட்டு வரலாறு ஐயூர் முடவனார் என்னும் சங்ககாலத்துப் புல வரும் தம்முடைய செய்யுளில் இச்செல்லூரைக் கூறுகிறார். ஆனால், பரசுராமன் கதையைக் கூற வில்லை. செல்லூரை யாண்ட அரசன் ஒருவன் ஆதன் எழினி என்பவனுடன் போர் செய்து அவ னைக் கொன்ற செய்தியை அப்புலவர் கூறுகிறார். "கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி யுழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணி யயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி அருநிறத் தழுத்திய பெருங்களிற்று எவ்வம் ”1 இச்செய்யுளிலும், செல்லூர் கடற்கரைக்கு அரு கில் இருந்ததென்பது கூறப்படுவது காண்க. பாரம் துளு நாட்டில் இருந்த இன்னொரு ஊர் பாரம் என்பது. இவ்வூரில் நன்னனுடைய சேனைத் தலைவ னாகிய மிஞிலி என்பவன் இருந்தான். "பாரத்துத் தலைவன் ஆர நன்னன்”2 என்றும், "பூந்தோள் யாப்பின் மிஞிலிகாக்கும் பாரம்”3 என்றும் இவ்வூர் கூறப்படுகிறது. பாழி இவ்வூர் பாழி என்னும் மலைக்கு அருகிலே இருந்தது. ஆகவே அம் மலையின் பெயரே இவ்வூ 1. அகம். 216: 8-15 2. அகம்.152: 12 3. நற்.265: 4-5