உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

துளு நாட்டு வரலாறு

36 துளு நாட்டு வரலாறு யவனர், இவ்விடத்தில் கடற் கொள்ளைக்காரர் இருந்ததை எழுதியிருக்கிறார். கடல் துருத்தியில் (கடல் தீவில் இருந்து கொண்டு யவன வாணிகக் கப்பல்களைக் கொள்ளை யடித்துக் கொண் டிருந்தபடியால், யவன வாணிகக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்க ளுக்கு வருவது தடைப்பட்டது. யவனக் கப்பல்கள் துளுநாட்டுக் கடற்கரையைக் கடந்துதான் சேர நாட்டுக்கு வரவேண்டும். யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டபடியால் சேரநாட்டு வாணிகம் பெரி தும் குறையத் தொடங்கிற்று. இதனால், கடல் துருத்தி (தீவில்)யில் இருந்த குறும்பரை அடக்க வேண்டியது சேர அரசனின் கடமையாக இருந்தது. கடற் போர் அக்காலத்தில் சேரநாட்டை யரசாண்ட சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ப வன். இந்த நெடுஞ் சேரலாதனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்), ஆடுகோட்பாட்டுச் சேர லாதன், இளங்கோ அடிகள் என்பவராவர். இத னைப் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து, 5ஆம் பத்து, 6ஆம் பத்துப் பதிகங்களினாலும் சிலப்பதிகாரம் வரந்தருகாதை (171-181) பதிகம் இவற்றின் உரை களினாலும் அறிகிறோம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடல் தீவி லிருந்த குறும்பனை அடக்குவதற்காக அவன்மேல் படையெடுத்தான். இவன், கடற்படை யொன்றைத் தன் மகனாகிய செங்குட்டுவன் தலைமையில் அனுப்