உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

37

துளு நாட்டு வரலாறு 37 பினான். அக்காலத்தில் இளவரசனாக இருந்த செங்குட்டுவன் கடற்படையோடு சென்று கடல் தீவிலிருந்த குறும்பருடன் போர் செய்து அவர் களை வென்று அவர்கள் காவல் மரமாக வளர்த்து வந்த பேர் போன கடம்ப மரத்தைத் துண்டு துண் டாக வெட்டி அதனால் முரசு செய்தான். கடல் குறும்பர்கள் அடியோடு ஒழிந்தனர். அதன் பிறகு யவனக் கப்பல்கள் வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வாணி கஞ் செய்தன. கடல் துருத்திப் போர் இமயவரம்பன் நெடுஞ். சேரலாதன் காலத்தில், அவன் மகனான சேரன் செங்குட்டுவன் இளவரசனாக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அதனால் கடற்போரை வென்றவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் சேரன் செங்குட்டுவன் என்றும் பதிற்றுப்பத்து 2 ஆம் பத்தும் 5 ஆம் பத்தும் கூறுகின்றன. செங்குட்டு வன், கடற்போரைத் தானே முன்னின்று நடத்தி வெற்றி பெற்றபடியால் அவன் "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்' என்று பெயர்பெற்றான். கடற் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போரை வென்ற செய்தியைப் பதிற்றுப்பத்து 2ஆம் பத்து இவ்வாறு கூறுகிறது. 'பவர் மொசிந்து ஓம்பிய திரள்பூங்கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நாரரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாத என்று கூறுகிறது.

2ஆம் பத்து 1:12-16