உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

துளு நாட்டு வரலாறு

38 துளு நாட்டு வரலாறு இதில், 'திரள்பூங்கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏய்' என்று கூறப்படுவது காண்க. (ஏய்-ஏவி). நெடுஞ்சேரலாதன் கடற்போரைச் செய்யத் தன் மகனை ஏவினான் என்பதும் தான் நேரில் அப்போரைச் செய்யவில்லை என்பதும் இத னால் தெரிகின்றன. என்று 'இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சே ரலாதன் வாழ்க அவன் கண்ணி'* நெடுஞ்சேரலாதன் கடற்போர் வென்ற செய்தி கூறப்படுகிறது. நெடுஞ்சேரலாதனுடைய மகனான கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் இக்கடற்போரை நேரில் சென்று நடத்தி வெற்றிபெற்றதைப் பதிற்றுப் பத்து 5ஆம் பத்துச் செய்யுட்கள் கூறுகின்றன. 'தானை மன்னர் இனி யாருளரோ நின்முன்னு மில்லை. மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவரி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேலிடுபு முழங்கு திரைப்பனிக்கடல் மறுத்திசினோரே.

இதில், கடற்போரைச் செய்தவர் செங்குட்டுவ னுக்கு முன்னர் ஒருவருமிலர் என்று கூறப்படு வது காண்க. இதனால், கடற்போரைத் தன் தந்தை யின் பொருட்டு முன்னின்று நடத்தியவன் செங் குட்டுவனே என்பது தெளிவாகத் தெரிகின்றது.

  • 2 ஆம் பத்து. 10 : 2-5

5 ஆம் பத்து. 5: 17-22