உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

துளு நாட்டு வரலாறு

40 துளு நாட்டு வரலாறு டுக்கு அருகில் இருந்தபடியால் துளுநாட்டு அரச ரின் ஆதிக்கத்தில் அது இருந்திருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம். எனவே, துளுநாட்டு நன்னனின் ஆதிக்கத்தி லிருந்த கடல்தீவுக் குறும்பர், நன்னனுடைய ஏவு தலின்மேல், யவனக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகங்களுக்குப் போகாதபடி குறும்பு செய் திருக்க வேண்டும். இக்காரணம் பற்றித்தான் சேர மன்னர் கடல் தீவுப் போரைச் செய்தது பற்றி இங்குக் கூறவேண்டியதாயிற்று. முதலாம் நன்னனுடைய வரலாறு முழுமையும் தெரியவில்லை. ஆனால், அவனுக்கும் சேர அரசருக் கும் பரம்பரையாகப் பகைமை இருந்தது என்பது தெரிகிறது. இவன், இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனின் சமகாலத்தவனாதலால், அவன் இருந்த காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில் இருந்தவனாதல்வேண்டும். அதாவது உத்தேசமாகக் கி. பி. 100 முதல் 125 வரையில் முதலாம் நன்னன் இருந்தான் என்று கொள்ள லாம். இரண்டாம் நன்னன் (ஏறத்தாழ கி. பி. 125-150) முதலாம் நன்னனுக்குப் பிறகு அவன் மகனான நன்னன் இரண்டாமவன் துளுநாட்டை யரசாண் டான். இவன் துளு இராச்சியத்தின் எல்லையை விரிவுப்படுத்த முயன்றான். அந்த முயற்சியில் ஓர ளவு வெற்றியையுங் கண்டான். சேர இராச்சியத் தின் வடக்கிலிருந்த சேரருக்கு உரிய பூழிநாட்டை வென்று அதைத் தன் துளுநாட்டுடன் சேர்த்துக்