உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

41

துளு நாட்டு வரலாறு 41 கொண்டான். மேலும், இவனுடைய துளுநாட்டுக் குக் கிழக்கே இருந்த கொங்குநாட்டின் வடபகுதி களைக் கைப்பற்றவும் முயற்சி செய்தான். இவனுடைய சேனைத் தலைவன் மிஞிலி என் பவன். IDL சிறந்த போர் வீரன். இவன் பாரம் என்னும் ஊரில் இருந்தான். முதலாம் நன்னன் காலத்துக்கு முன்பிருந்தே சேர அரசர் தென் கொங்குநாட்டைச் சிறிது சிறி தாகக் கைப்பற்றித் தங்கள் சேர இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டனர். அக்காலத்தில் கொங்கு நாட்டைச் சிறுசிறு குறுநில மன்னர் ஆண்டனர். சேர சோழ பாண்டிய நாடுகளில் பேரரசர் இருந்தது போலக் கொங்குநாட்டில் பேரரசன் இல்லை. சிற்றர சர்கள் ஆட்சி செய்த கொங்குநாட்டைச் சேர அரச ரும் துளுநாட்டு அரசரும் முறையே தென் கொங்கு நாட்டையும் வடகொங்கு நாட்டையும் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக்கொண் டிருந்தார்கள். சேர அரசரும் துளு மன்னரும் கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதைக் கண்ட சோழ பாண்டிய அரசர் களும் கொங்குநாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்தார்கள். இவ்வாறு, கொங்கு நாடு கடைச்சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்) தமிழ் அரசர்களின் பொதுப் போர்க்களமாக இருந்தது. கொங்குநாட்டைச் சேர்ந்த உம்பற்காடு யானை மலைப் பிரதேசம்) என்னும் பிரதேசத்தைச் சேரர் முதலில் கைப்பற்றினர். உம்பர் காட்டை வென்று அங்குத் தன் ஆட்சியை நிறுவினவன் 1062-3