பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

一8一

உண்ணுகின்றனரோ, அவர்கள் ஆயுள் நீடிக்கப்பட்டு கில உலகில் டுே வாழ்வார்கள். இந்தப் பண்பு அந்தச் கனிக்கு உண்டு என்பதை அதிகமான் நெடுமான் அஞ்சி அறிவான்.

இத்தகைய கனி ஒன்று கிடைத்தால் நாம் என் செய்வோம் ? நாமே உண்டு நெடுநாள் கில உலகில் வாழ விருப்பம் கொள்வோம் அல்லவா? இவ்வரிய கணியினைப் பிறர்க்கு ஈய முற்படுவோமா? அப்போது, ' தனக்கு மிஞ்சிதானே தருமம் ' என்ற பழமொழி யும் நம் நினைவிற்கு வந்து கம் எண்ணத்தினை மேலும் உறுதி செய்துகொள்வோம் அல்லவா ? ஆனால், அதிகமான் நெடுமான்அஞ்சி. அக் கனியினைத் தானே உண்ண எண்ணம் கொண்டிலன். அப்படி எண்ணம் கொண்டிருந்தால், அவன் எப்படி வள்ளல்களின் வரிசையில் வைத்துச் சிறப்பிக்கப்படுவான் ? சந்தால் தானே இசைபட வாழ இயலும்? ஆகவே, அதிகமான் நெடுமான் அஞ்சி, அக்கனியினே ஒளவையார்க்கு ஈந்து அகம் மகிழ்ந்தான். அக் கனியினே அவ்வம்மையார் உண்டபின், அதன் இயல்பினை அறிவித்தனன். முன்னர் அறிவித்திருந்தால் அவ்வம்மையார் அதனே உண்ண மறுத்து, அவனேயே உண்ணுமாறு வற்புறுத் தவும் கூடும் என்பதே காரணமாகக்கொண்டு, அவன் முன்னர் அதன் தன்மையினே அறிவிக்காமல், பின்னர் அறிவித்தனன். ஒளவையார் அதிகனுடைய தனக்கென