பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

—9–

வாழாப் பிறர்க்கென வாழும் பெற்றியினைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டனர். அப்போது அவனேப்

புகழ்ந்து வாழ்த்தினர். அவ்வாழ்த்து,

போரடு திருவில் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும் நீயே தொல்நிலைப் பெருமலை விட்ரகத்து அருமிசைக் கொண்டி சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்குஈத் தனையே என்பது. இதன் பொருள் எதிரிகளைப் போரில் கொல்லும் திருவினைப் பெற்ற வெற்றிமாலே அணிந்த அஞ்சியே, வெண்மையான பிறைச் சந்திரனே அணிந்த முடியினேயும், நீலகண்டத்தையும் உடைய இறை வனைப் போல இங்கிலவுலகில் பல்லாண்டு வாழ்க. நீ பள்ளத்தாக்கில் மரத்தின் உச்சியில் விளங்கிய நெல்லிக்கனியினை அதன் தன்மையினே எனக்கும் குறிப்பிடாது என் இறப்பு நீங்க ஈந்தனை அல்லவா ?” என்பது. இக் நிகழ்ச்சி ஒன்றே ஒளவையாருக்கும் அதிக மானுக்கும் இருக்த அன்பின் எல்லேயை இனிதின் விளக்கும். இதுகிற்க.

தொண்டை காட்டில் காஞ்சிபுரத்தினைத் தலை நகராகக்கொண்டு, தொண்டைமான் இளங் திரையன்