பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

உரையாடிக் கொள்ளாமல் தம் தம் இருப்பிடம் சார்ந்தனர்.

எங்கும் கண்ணுளாய்ை எங்கும் காதுளாளுய் சீக்கமற நிறைந்திருக்கும் இறைவனம் சிவபெருமான் தனது தொண்டன் உள்ளக் கருத்தையும், தன் தேவி யின் சேடியர் எண்ணக் குறிப்பினேயும் அறிந்து அம் மூவரையும் விளித்து " நீங்கள்கொண்ட எண்ணங் குறித்து எமக்கு மகிழ்வே என்ருலும், உம் விழை வினே கிறைவேற்றிக்கொள்ள இஃது இடம் அன்று. ஆகவே, நீங்கள் கிலவுலகில் பிறந்து வேட்டவாறே கடிமணம் புரிந்து, பின்பு ஈண்டு அடைவீர் ' என்று ஆணை பிறப்பித்தனன். அவ்வாணேயினைத் தலைமேற் கொண்ட மூவரும் கில உலகில் தோன்றும் வாய்ப் பினேப் பெற்றனர்.

ஆலால சுந்தரர் திருமுனேப்பாடி காட்டிலே திரு காவலூரிலே ஆதிசைவ மரபிலே சடையனர் இசை ஞானியார் ஆகிய இருவர் செய்த தவப்பேற்றினுல் திருமகனராகப் பிறந்தருளினர். அப்போது இவருக்கு இடப்பட்ட பெயர் கம்பி ஆரூரர் என்பது. இவரைப் போலவே, கமலினியார் என்பவர் திருவாரூரில் உருத் திரக் கணிகையர் மரபில் தோன்றினர். அப்போது அவ்வம்மையார் திருப்பெயர் பரவையார் என்பது. இவ் வம்மையாரைப் போலவே அணிக்திதையாரும் ஞாயிறு என்னும் ஊரில் வேளாளர் மரபில் ஞாயிறு கிழார்