பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

—52—

யும் அழியும் ' என்று அன்புடன் எடுத்துக் கூறினர். அதன்பின் துரோணுசாரியாரும் கிருபாசாரியாரும், துரியனைப் பார்த்து, " துரியா, முன் சொன்ன வாக்குப்படி அப் பஞ்சபாண்டவர்கட்கு காட்டை அளித்துவிடு. இதுதான் அறம். இவ்வாறு செய்யா மல் படை திரட்டிப் போருக்கு ஆயத்தம் ஆதல் பெரும் பிழையாகும். முனிவர் கூறியபடி அர்ச்சுனன் தன் வில்லை வளைத்துச் சமர் செய்ய முன் நிற்பகிைல் அவன் முன் எந்த வில்லி எதிர் நிற்க இயலும் ?” என்று கூறினர். வீடுமரும் திருதாாட்டிரனைப் பார்த்து, ' திருதராட்டிர, உன் இளவலான பாண்டு வின் குமாரர்களான பஞ்ச பாண்டவர்கட்குக் கழித்து வரவேண்டிய காலமாகிய பதின் மூன்று ஆண்டுகளும் கழிந்தன. அவர்கள் நீங்கள் கூறியபடி தம் காட் களைக் கழித்த பிறகே வந்து காட்டினே கல்குமாறு கேட்கின்றனர். அவர்கட்கு அக் காட்டினேத் திருப்பித் தந்து விடுதலே தக்கது. அவ்வாறு இன்றி அமர் செய்தல் முறையன்று. அர்ச்சுனன் முன் எவரும் அமர் செய்ய இயலாது. என்று உண்மை யினை ஒளியாமல் சிறிது சினத்தோடும் உரைத்

திட்டார்.

இவ்வாறு வீடுமர் புகலக் கேட்ட கன்னன் பொறுத்திலன். அவன் ஒரு சிறந்த வில்லாளி பல்லவா? ஆகவே, காங்கேயளுகிய வீடுமரை நோக்கி,