பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

8. க ண் ண ன்

தருமர் முதலிய ஐவர் பஞ்சபாண்டவர் என்றும் துரியன் முதலிய நாற்றுவர் கெளரவர் என்றும் கூறப் படுவர் என்பது. நீங்கள் அறிந்ததுதானே? இவர்கள் ஒருவர்க் கொருவர் பங்காளிகளாயினும் பகைவர் களாகவே இருந்தனர். இப்பகைமை கெளரவரிடத்தி லிருந்து எழுந்ததே அன்றிப் பாண்டவரிடத்திலிருந்து பிறந்ததன்று.

தருமர் ஊழ்வலி காரணமாகத் துரியனுடன் பந்தய மிட்டுச் சூது ஆடித் தமக்குரிய சொத்துச் சுதந்தரங்களேத் தோற்றனர். இங்கனம் தோற்ற வற்றை மீண்டும்பெற வேண்டினல், பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து பதின் மூன்ருவது ஆண்டு தாம் இருக்கும் இடம் இன்னது என்பது எவரும் அறியாத கிலேயில் தம் உருவினை மறைத்து வாழ்ந்து காட்டிடை வந்தால் இழந்த உரிமைகளை ஈவதாகத் துரியன் கூறி யிருந்தனன். அங்ங்னமே பாண்டவர் ஐவரும் பன்னிரண் டாண்டுகள் அடவியில் இருந்துவிட்டு, ஓர் ஆண்டு விராடபுரத்தில், அக் நகரத்து மன்னனும் அறியாத லையில் தம்மை வெளிப்படுத்தாது இருந்தும் தம்