பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கூறிய வார்த்தையினத்தவறினேன் என்று தேவர்கள் புகன்ருலும் சரி. என்ளுேடு எதிர்த்து அப் பஞ்சவர் போர் தொடுத்தாலும் சரி. ஈ அமரும் இடம்கூட அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்று சிறிதும் இரக்கம் இன்றி இயம்பினன்.

கண்ணன் இந்தவாருன சினம் மிக்க வார்த்தை களைக் கேட்டு, மன்ன, காடு முழுமையினையும் கொடுக்க மனம் இல்லையாயின், பாதி காட்டினேயேனும் தருதி." என்றனன். அதனையும் தர மறுத்தனன் துரியன். கண்ணன் மீண்டும் " ஐவர்களும் தனித்தனி வாழ ஐந்து ஊர்களேயேனும் வழங்குக ' என்று இரங் தனன். இவ்வளவு கெஞ்சிக் கேட்டும் ஒரு வீடுகூட அளிக்க மறுத்தனன் துரியன்.

மாயன் மேலும் துரியனே கோக்கி, ' துரிய, விடுமர் தம் தந்தையின் பொருட்டு, தம் வாழ்வையும், அரசினையும் துறந்து உன்னுடனே வாழ்ந்து வருகின் ருர். அதனே எண்ணியேனும் நீதி முறையினே எண்ணி யேனும் உன் துணைவர்கட்கு ஐந்து ஊர் கூட ே கொடுக்க மறுத்தால், உனது அரசியலே என்னென்று உரைப்பது ஒரே குலத்தில் இரண்டு மன்னர் உடன் பிறந்து அரச உரிமை பெற்ருல் இருவரும் ஒத்து வாழ்தல் முறையாகும். அப்படி இருக்க, குரு குலத் தவராகிய நீங்கள் இருவரும் ஒத்து வாழாதது பெருங் குறையாகும்.” என்று எடுத்து மொழிந்தனன்.