பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

—3–

கிறது அல்லவா? தூதுவர் எல்லா நால்களேயும் கற்று வல்லார்முன் அங் நூல்களேத் தாமும் கற்று வல்லவ. ராய்த் திகழ்தல் இன்றியமையாதது. நூலே கன்கு. ஒதியவர்களேக் காட்டிலும், அந் நூல்களை ஒதி உணர்ந்தவர் முன்னர் நூலின் திறனே வகுத்துக் கூறும் ஆற்றல் தூதுவர்க்குப் பெரிதும் வேண்டற் பாலதாகும். அறிவு வேண்டும் கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும் வேண்டும்; ஆராய்ந்த படிப்பும் வேண்டும். இந்த மூன்றையும் பெற்றவரே தூது உரைக்கச் செல்லத்தக்கவர் ஆவர்.

செய்திகளைப் பிறர் மாட்டுக் கூறுங் காலத்துத் தொகுத்துச் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லவேண்டும். இன்னதது இருக்குமாயின், அத னைச் சொல்லும் காலத்து, இனிய சொற்களால் எதிரி மனம் மகிழும்படியும் சொல்லவேண்டும். இதனுல் சுருங்கச் சொல்லவேண்டும் என்பதும், விரும்பாத சொற்களே நீக்கவேண்டும் என்பதும், மகிழுமாறு சொல்லவேண்டும்என்பதும்விளங்குகின்றன அல்லவா?

தூதராகச் சென்றவர். தம்மைத் தூது போக்கி யவர் கூறியவற்றை எதிரியிடத்தில் கூறும்போது, அவ்வெதிரி கோபங்கொண்டு, தம்மைக் கொல்வான் போன்று சீற்றக் குறியுடன் பார்க்கவும் நேரிடும்' அந்தக் காலத்திலும் சிறிதும் அஞ்சுதல் கூடாது காலத்தை அறிந்து காரியம் முடிதற்கான முறையில்