பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so துளசன் எழுத்தேசவியங்கள் கொஞ்சம் அசைந்தால் அதன் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கு அவனே துண்டுகோல் போட்டதாகும். ஆளுல் அசையாமலிருந்துதான் என்ன பலன்? எப்படியும் அவன்மேல் பாய்வதென அந்தப் புலி முடிவு கட்டிவிட்டது. சுந்தரத்திற்கு ஒன்றுமே புலப்படவில்லை. தனது சாமர்த்தியமெல்லாம் இன்று உதவவில்லையே என்று அவன் உள்ளம் கலங்கினன். பாதுகாத்துக்கொள்ள ஒரு முயற்சியும் செய்யாமலா இந்தப் புலியின் வாயில் சிக்குவது என்று அவனுக்குக் கோபம் வேறு. என்ன ஆலுைம் சரி, துப்பாக்கியை எடுத்துச் சுடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டான். - இரண்டு உயிர்களும் ஒரே முடிவுக்கு வந்திருக்கின் றன. எந்த உயிர் எந்த உயிருக்குப் பலியாகுமோ என்று திகைக்கும்படியான அந்தப் பயங்கரகணநேரம். புலியின் வால் சுருண்டு நிமிர்ந்து விட்டது. பாய்வ தற்கு வேண்டியவாறு உடம்பு முறுக்கேறி விட்டது. சுந்தரத்தின் கை துப்பாக்கியைத் தூக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு ஜோடிக் கண்கள் மட்டும் மாருமல் ஒன்றை ஒன்று விழுங்குவனபோல் பார்த் திருந்தன. அவற்றிற்கிடையே கூற்றுவனின் பாசக் கயிறு இங்கா அங்கா என்று ஊசலாடிக்கொண் டிருந்தது. ஆயிற்று, பஞ்சுக் காலன் பாயப் போகிறது. அந்தக்கணத்திலே எதிர்பாராத கிரீச் என்ற ஒரு குரல் கேட்டது. ஓர் எலியின் கீச்சுக் குரல். அதையொட்டி ஓர் ஆந்தையின் அலறல். எலியென்ருல் ஆந்தைக் குப் பிரியமான உணவல்லவா? எங்கேயோ மரக் கிளை யிலே உட்கார்ந்திருந்த அந்த ஆந்தை பஞ்சுக் கால்