பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சுக் காலன் 莓勤 னுக்கு அருகிலே குடுகுடுவென்று சென்ற ஒர் எலி யைப் பார்த்து விட்டது. அதன்மேல் ஒரே பாய்ச்சல், எலி பயந்து அலறிக் கத்தியது. அதைக் கொன்ற ஆந்தையும் வெற்றிக் குரல் கொடுத்தது. இவ்வாறு ஏற்பட்ட அந்த சப்தம் எப்படியோ பஞ்சுக் காலனின் கவனத்தை ஒரு விநாடி கவர்ந்தது. பார்வையைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பிற்று. சுந்தரத்திற்கு அந்தக் கண நேரம் போதும், மின்னல் வேகத்திலே துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து விட்டான். எமாந்த புவியும் மறு கணத்திலே அவன்மேல் மூர்க்கத்தனமாகப் பாய்ந்தது. ஆனல் சுந்தரம் முந்திக்கொண்டான். அவன் குறி தவறியது கிடையாது. முதல் குண்டிலேயே பஞ்சுக் காலன் மடங்கி விழுந்தது. அடுத்த குண்டு அதன் உயிரை முற்றும் போக்கிவிட்டது. சுந்தரத்திற்கு எப்பொழுதுமே ஆந்தை என்ருல் ஒரு வெறுப்பு. அதைக் கண்டால் சுடாமல் விடமாட் டான். அழகற்ற அதன் தோற்றம், அருவருப்பைக் கொடுக்கும் அதன் குரல் இரண்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆளுன் பஞ்சுக் காலன் வேட்டையி லிருந்து அவனுக்கு ஆத்தைகளிடம் மிக்க மதிப்பு உண்டாகிவிட்டது. ஒவ்வோர் உயிர்ப் பிராணியையும், ஒரு நல்ல பணிக்கு இறைவன் உண்டாக்கியிருக்கிருன் என்று அவன் அது முதல் கூறிக்கொண் டிருக்கிருன்.