பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 த ரன் எழுத்தோனியங்கள் ஆளுல் அதைப் பற்றி நெடு நேரம் சிந்தனை செய்து கொண்டிருக்க நேரமில்லை. அன்று ஒரு நல்ல இசையரங்கு நடக்க இருந்தது. அதற்குப் புறப்பட வேண்டிய முயற்சியில் கவனம் செலுத்தலானேன். ஐந்து நிமிஷங்கூட ஆகவில்லை; அவன் மறுபடி யும் வந்தான். ஆளுல் நான் அவனைப் பார்க்கவில்லை : என் மனைவி பார்த்தாள். அவளிடம் என்னை எங்கே என்று விசாரித்தாளும். "இதோ உள்ளே குளிக்கும் அறைக்குப் போயிருக்கிருர் வந்து விடுவார் ' என்று என் மனைவி பதில் சொன்னுள். ' அதிக நேரம் ஆகுமா? அவரிடம் அவசமாக ஒன்று கேட்க வேணும்' என்ருன் அவன். அவள் உட்பக்கம் வந்து என்னிடம் விஷயத்தைக் கூறிவிட்டு மறுபடியும் அவனுக்குப் பதில் கூற முன் அறைக்குச் சென்ருள். அதற்குள்ளே பட்டணம் கை வேலை செய்து விட்டது. மேசைமேல் நான் சற்று முன்புதான் கழற்றி வைத்துவிட்டுப் போன கைக்கடிகாரத்தை அவன் எடுத்து மறைத்துக்கொண்டான். சற்று நேரத்தில் நான் வந்துவிடுவே னென்கிற செய்தியை அவனுக்கு என் மனைவி சொல்லவே, அவன் ஏதோ தலை போகிற அவசரம் போல, "மறுபடியும் பத்து நிமிஷத்தில் வந்து அவரைக் கண்டு கொள்கிறேன்; கொஞ்சம் அவசரம்' என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான். நான் திரும்பி வந்ததும் விசாரித்தேன். 'அந்த ஆள் ஏதோ அவசரமாகப் போய்விட்டான், பத்து திமிஷத்தில் மறுபடியும் வருவான்' என் என் மனைவி பதில் கொடுத்தாள்.