பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 துன ரன் எழுத்தோவியங்கள் மனிதா, நீ உன்னதமான அறிவைப் பெற்றிருக் கிருய். உனக்கு அது தனிச் செல்வம். அதைக் கொண்டு எத்தனையோ வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொண்டிருக்கிருய். இறைவனின் அம்சமே நீ என் பதையும் கண்டிருக்கிருய். உன்னுள்ளே, உலகத்தி லுள்ள எல்லாப் பொருள்களினுள்ளே, கல்விலே, கடலிலே, பூவிலே, பொறியிலே எங்கும் ஒரே இறை வன் இருக்கிருன் என்ற மிகப் பெரிய அற்புதமான உண்மையைக் கண்டிருக்கிருய். பின் ஏன் உனக்குக் கவலை? ஏன் உனக்கு இந்த நாச எண்ணம்? சோறில்லையா? ஒருவனை ஒருவன் வெட்டாமல், குத் தாமல் சுகங் கிடைக்காதா? சிறகு மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் எத்தனையோ இன்பங்களைத் துய்க்க லாமே என்று ஏங்கினுளும் ஒருவன். சிறகு பெற்ற ஈ என்ன செய்கிறது? மலத்தில் உட்காருகிறது. சீ. அதைச் சொல்லக்கூட அருவருப்பாக இருக்கிறது. சிறகு இருந்து என்ன பயன்? அதைப் பயன்படுத்த அறிவு வேண்டாமா? மனிதனுக்கு அறிவு இருக்கிறது. ஆளுல் அதைக் கோணல் வழியில் அவன் செலுத்து கிருன். நேர்வழி கண்ணுக்கு முன்னலே கிடந்தாலும் அது அவனுக்குத் தெரிவதில்லை. மனிதா, உனக்குச் சோறு கிடைக்கவில்லையா? இயற்கை அன்னை சோறுபோட மறுத்துவிட்டாளா? உனது அறிவை நேராகச் செலுத்தினுல் ஒன்றுக்குப் பத்தாக இயற்கை அன்னை கொடுக்கிருள். ருஷி யாவிலே பனிப் பாலைகளிலேகூட இன்று கோதுமை விளைகிறதாம். பனியிலே வளரக்கூடிய பாசியையும் கோதுமைப் பயிரையும் ஒட்டுச் சேர்த்து அவற்றி" விருந்து ஒரு புதிய கோதுமைப் பயிரை உண்டாக்கி