பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன் வழிநடைப் பாட்டு

ஆயிரம் ஆயிரம்

 அளவிலா உயிர்கள்

தாய் பணிக் காகத்

 தந்திட வருவாய் !-ஜேய் 
                       ஹிந்த்

சீற்றம் பொங்கிடச்

 சிறுமைகள் நொறுங்கிடக் கூற்றினை நகைத்தே
 கூவி அதிர்ப்பாய் !-ஜேய் 
                       ஹிந்த்

நாற்பது கோடியாம்

 நம்மனோர் வாழ்ந்திட

ஆற்றலும் ஆண்மையும்

 அவனியிற் காட்டுவாய்!-ஜேய் 
                       ஹிந்த்
            102