பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில்லாமலே பட்டண வீதியில் பதறியே நிற்கிருள்மட்டிலாச் செல்வம் வலம்வரும் சந்தியில் து.ாசெனக் காசினை வீசியே நவநவப் பாசியும் சுண்ணமும் பகட்டும் வாங்குவோர் சேர்ந்திடும் சூழலில் சென்னையின் வளமெலாம். ஊர்ந்திடும் வீதியில் ஒருகண் இல்லையோ? மெச்சிடும் பண்பெலாம் வெறும்வெளிப் பூச்சோ? பச்சையும் பரிவும் பறந்ததோ வறண்டதோ? வண்மையும் மாய்ந்த தென்னினும் இந்தப் பெண்மையாம் குலத்தின் பெருமையைக் காக்கவும் எண்ணமும் இல்லையோ? இந்தநா டென்றும் அன்னையாம் சக்தியை அடிதொழு தேத்தும் பெருமையே உடைத்தெனும் பேச்சும் ஒழிந்ததோ? இருதயம் இல்லாப் பட்டணம் இதுவோ? இங்குளோ ரெல்லாம் நினைத்திடில் இமைப்பினில் அங்கை ஏந்துவோர் ஆருமே இலாமல் செய்யவும் ஆகுமே, சென்னையின் சீர்மையும் மெய்மையாய் விளங்கிடும்; கவிஞனும் வாழ்த்துமே. 148