பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் மிதந்த நெஞ்சம் வெட்டெனவே பேசாமல் வெம்புமுளம் விரிப்ப தற்கும் இசையைப்போல் வேறில்லை. என்றனுளம் அந்நிலையில் கசிந்துருகிப் பண்ணுெலியைக் கள்ளனெனத் துாற்றிடுமே. நள்ளிருளில் உருமறைத்த நரகத்தின் துயர்.இசையே, உள்ளத்தைச் சொல்லிவிட்டால் உற்ருர் கடிவாரோ? ஈரநெஞ்சம் அவர்க்கிலையோ? இருளும்அழு கின்ற திங்கே பேரறியாப் பேரவலம் பெருந்துக்கத் தெல்லோரும் செத்திருக்கும் வேளையிலே செறிந்தவிருட் பாங்கியுடன் சித்தங் கலந்தாயோ தீராத் துயர்க்கொடியே? தக்கவிடத் தும்பாதை தாண்டறியாக் குறுங்கொள்கை மக்களிடை யுன்னுளத்தை மறைக்காமற் - காட்டுதற்கு ஒற்றைத் தனிச்சீவன் ஒருவருமே கிடையாதோ? மற்றிங்கு நானுனக்காய் மாழ்குவதுங் காணயோ? கண்ணில்நான் படினுமென்றன் கண்ணிர்நீ உணர்ந்தாலும் எண்ணத்தில் தூயவனென் றெப்படித்தான் கண்டறிவாய்? ஆளத்திப் பண்வீச்சில் அவலமெலாம் காரிருளின் நீளத்தில் மிதந்ததல்ை நெஞ்சம்சிறி தாறுவையோ? 158.