பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் மிதந்த நெஞ்சம் முல்லைச்சுடர் விரிக்கும் முழுநிலவின் தேன்கதிர்கள் சொல்லிற் குழைவதுபோல் சொல்லற்ற சோகத்தின் பண்ணை யிசைக்கின்ற பைங்கொடியார் அறியேனே. கண்ணில் தெரியாமல் காதினிலே சூடேற்றும் மங்கையிந்த நீளிரவில் மனத்துயரக் கனவெல்லாம் பொங்கப் பொழிகின்ருள் பொன்னட்டுத் தீங்குரலில் பாட்டறியாப் பண்வீச்சில் பச்சையுளத் துடிப் பெல்லாம் ஒட்டுகின்ருள் வீதிமுனை ஒருமாடத் துள்ளிருந்தே, மோனத்துயர் இருளை மோதிவந்தென் உளம்புகவே நானும் செயலற்று நடுத்தெருவில் நின்றிருந்தேன்யாரோஇப் பெண்கொடியாள்? ஏளுேஇப் பெருந் துயரம்? சீராகக் கைபிடித்தோன் சிந்தையன்பு பிரிந்தானே ? மனத்தன்பு வேறிருக்க மணவாழ்க்கை இங்காச்சோ? தினைப்பொழுது கணவனுடன் சேர்ந்திருந்து வாழுமுன்னர் கொடுங்காலன் துணைவனையே கொண்டோடிப்

  • - • . போனனே? படுந்துயரம் ஏதெனவே பண்ணிசையும் கூறவில்லை; உட்பொருளைக் கூருமல் உணர்ச்சிதனைக் காட்டு

தற்கும் 152