பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருவாய் காதல்தேன் சுவைத்திட்ட காளைகன்னி யுள்ளம் கனிந்திணைந்து பெறுமின்பக் கவினுலகின் மேலே, சாதல் எனும் இருட் கதவைத் தாண்டிப்பே ரின்பம் சார்ந்திருப்பார் தனிஉலகத் தெல்லைக்கும் மேலே, பரவெளிக்கும் மேலாம் பாழ்வெளிக்கும் மேலே, அரவணிந்த சங்கரளுர் ஆடும் வெளிக் கப்பால், எல்லையெலாம் கடந்து நின்ற எல்லைக்கும் மேலே, சொல்லினிலே கட்டுண்ணு எல்லைக்கும்மேலே, கற்பனையின் மோனத்தில் தற்பரனின் ஞானத்தில் அற்பமெலாம் தள்ளியெழும் நற்கருணைப் போதத்தில் மேலுக்கும் மேலான மேலிடத்தே தோன்றும் காலத்தை வென்றகவிக் கனவெனக்கே தருவாய்.