பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது வழி மழை காணுத பயிர் போலாயிற்று அவன் உள்ளம். ஏங்கிற்று. கரையற்ற அவன் அன்பும் ஒரு நொடிப் மறைந்து விட்டது. பொழுது என்ன மண்ணுலக மடா இது என்று கூட வாய் ஒரு தரம் உச்சரித்து விட்டது. உடல் நைந்தது. ஆனல் கவிதைக் கனல் ஓயவில்லை. மேலும் மேலும் கொழுந் தோடியது. உடலை வெதுப்பியது. உள்ளத்தின் துடிப்பாக ஒலித்தது. அவன் கந்தர்வ இன்பங்களைச் சொல்லில் குழைத்துப் பூங்காற்றில் மிதக்க விட்டான். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஐயனின் சாந்தி அவன் பாட்டில் தவழ்ந்தது. பட்ட மரம் தளிர்த்தது. பறவைகள் குது.ாகலித்தன; அவனுடன் உறவாடின; அவனுக்கு மேலே பறந்து நிழல் செய்தன; விலங்குகள் அவனைச் சூழ்ந்துகொண்டன; காக்கையும் குருவியும், ஆடும் மாடும், சிங்கமும் புலியும் அவன் ஜாதியாகி விட்டன. மலையும் காடும், ஆறும் கடலும் அவன் கூட்டமாயின.