பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது வழி திடீரென்று அவன் தோன்றினன். அவன் வருகை யாருக்கும் தெரியாது வான வில்லென அவன் வந்தான். தோற்றத்தில் அவனிடம் புதுமை ஒன்றுமில்லை. ஆனல் எங்கும் காணுத ஒரு புதுமை ஒளி அவன் கணகளில் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. ஒரு கனல். உணர்ச்சி மின்னலின் கொழுந்து. ஆத்ம சக்தியின் ஜோதி. அவன் கம்பீரமான குரலில் பாடினன். உள்ளத்தில் எழுந்து மோதும் கனவுகளை காற்றில் பரப்பினன். பெல்லாம் ஒரே சங்க நாதம். வேதங்களின் மூச்சு அவன் பாடலில் வீசிற்று. அமுதத்தின் தெளிவு கலந்திருந்தது. நிலவின் தீஞ்சாறு மிதந்தது. வீரக் கனல் வழிந்தது. புதிய உயிர்பெற்றுக் கவிதை பொங்கிற்று. ஆனல் யாரும் அதைக் கவனிக்கவில்லை. மக்கள் அவர்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 212