பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைவாய் அயிலைப் பழித்த விழியா யுனக்கு நான்-இன்று அறிவிப்ப தொன்று பதில் அன்பு பேசுவாய் குயிலைப் பழித்த மொழி கொஞ்சுங் கொடியே. -உன்றன் குரலில் கசப்பிடுமோர் சொல்லும் வருமோ? மதனன் மயங்கிடுமுன் மார்பிரண்டினில்-என்றன் மனது கிடப்பதை நீ கண்டதில்லையோ? வதன மதி நிகர்த்த மங்கை யமுதே-மறு மாற்றம் நீ சொல்வதிலென் வாழ்க்கை யுள்ளதே அமரமெல் லிசைதரும் மோனமதிலே-பொங்கும் அமுதமாம் இன்பனழிற் சிற்ப மங்கையே தமனிய மேனியளே சந்தச் சுவையே-உளம் தடையின்றி அவ்விடமே தங்க இசைவாய். 220