பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவிழந்தபோது உருமறைந்தே சுவர்க்குள்ளே ஒளியிழந்த பாங்கினிலே, இளமைமனம் மாருமுன் இளங்குருத்துத் தோன்ருமுன் உளம்வாழ்வில் ஒன்ருமுன் ஒருமாயக் கனவெனவே அடுப்பறையில் மறைந்தாயே! அகமடுப்பாய் எரிவாயோ? வடுக்கண்ணை உலையாக்கி வாழ்நாளே உலைநீராய்ப் பொங்குவையோ? பொருமியுளம் புடத்தியாய் வெம்புவையோ? மங்கியதே என்கவிக்கு வளமளித்த எழில்தெய்வம்; மலர்ப்பிரமன் விதிப்பிழையோ? மக்கள்மதிக் குறைப்பிழையோ? குலப்பெருமை குலவழக்கக் குருட்டுநிலைக் கொடும்பிழையோ? எதுவென்றே கூறிடுவேன்? இன்னுயிர்க்குத் துணையாய்நீ மதித்தன்று தேர்ந்திருந்தால் . வாழ்வொடியக் காரணமாம் பெற்ருேர்கள் உறவின்ர்கள் பிழைமுடிப்புக் காகஇன்று முற்ருத பேரெழிலின் மொட்டுதிர நியாயமென்ன? 248