பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மறவேன் எட்டியுங் கசந்திடுமோ இளந்தேன் இனித்திடுமோ நட்டமிடும் பித்தனுடன்-என்கல் நெஞ்சே நான் மறைந்து கூடிவிட்டால். நட்டமிடும் பித்தனுடன் நான்மறைந்து கூடிவிட்டால் எட்டியும் இளந்தேனும்-என்கல் நெஞ்சே ஏகமாய்க் கானதோ? போக்குவர வில்லா த பூரணமாம் போதத்தில் நீக்கமற நின்றபின்னர்-என்கல் நெஞ்சே நீயேது நானேது? நீக்கமற நின்றபின்னர் நீயுமில்லை நானுமில்லை பார்க்கவொரு பாவையில்லை-என்கல் நெஞ்சே பார்ப்பவனும் இல்லையன்ருே? பூரணத்துள் ஒன்ருகப் புகுந்து நிறைந்திடவே காரணமாய்த் தோன்றிடுவான்-என்கல் நெஞ்சே கருணையுள்ள சற்குருவே. காரணமாய்த் தோன்றும் கருணையுள்ள சற்குருவே ஆரணங்கள் போற்றுகின்ற-என்கல் நெஞ்சே ஆதிமுதல் நாதனன்ருே? 250