பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

● @ 闵 சந்திப்பு 1. காதலனைச் சந்திக்கக் காட்டுவழி நான் சென்றேன்நெற்றியிலே சுட்டி நீள் விழிக்கு அஞ்சனம் காதிலே வைரம் கன்னத்தில் நறுஞ் சுண்ணம் கழுத்திலே பொன்மாலை கைகளில்ே மின் வளையல் கால்களிலே பாதசரம் கருங்கந்தல் மலர்க்காடு நீல வண்ணப் பட்டாடை நித்திலத்தில் தனி மாலை மேனிப் பொன் நிறக் கச்சு விம்முகின்ற மார்பலம்பும் மலர் மாலை மெல்விரலில் மாணிக்கக் கணையாழி காதலனைக் காணக் காட்டு வழி நான் சென்றேன். அணியெல்லாம் குறைவின்றி ஆர்வமுடன் சென்றேன் 289