பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழு கடலும் எழுகடலும் வற்றிடினும் என்காதல் வற்ருது அழிவறியா உயிரூற்றென் றன்றுரைத்து மருங் கணைந்தார் போனதிசை நானறியேன் புதுப்புனவில் புகுந்தாரோ வானவில்லுப் பேச்சழகர் மறைவதிலும் அது வாளுர்குடியல்ல குலமல்ல குணங்கெட்டேன்; இனிக் கெடவோர் படியுண்டோ? பாலையெனப் பச்சையுளம் தீய்ந்தழிவேன்;நயப்புரையில் வீழாத நன்மதியும் நெஞ்சுரமும் அயர்வறியா நிறைத்தெளிவும் அழகெனவும் - - அணியெனவும் கொண்டிருந்தால் என்வாழ்வு குலைந்திடுமோ? பட்டிமனச் சண்டியினல் பீடழிந்தேன் சாவொன்றே - இனிவாழ்வாம். 295