பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சாந்தி

எங்கள் இமயச் சிகரத் துயர்வில்

 தங்கும் மோனத் தவமே சாந்தி கங்கும் கரையும் அளவும் 
                     இல்லாக்
 ககனப் பெருநல் வெளியே 
                        சாந்தி

பொங்கும் கடலிற் புதையும் நீலப்

 பொலிவில் வதியும் ஒளியே 
                  பேபி சாந்தி

மங்கும் பொழுதில் வையம்

                      தனிலே
 வைகும் தனிமைத் தெளிவே 
                        சாந்தி
    சாந்தி சாந்தி சாந்தி


முனிவோர் ஞானச் செறிவால்

                     உணரும்
 முடியா மறையின் முடிவே 
                        சாந்தி

பனிபோல் வாழ்வென் றரசும்

                      தள்ளிப்
 பதுமத் துறைவோன் வடிவே 
                        சாந்தி

நனிடே தையரால் அறையும்

                      சிலுவை
 தனிலே வளர்வோன் அருளே 
                        சாந்தி

கனிவால் முறுவல் தவழத்

                      தூங்கும்

கபடில் மதலைத் திரளே சாந்தி

     சாந்தி சாந்தி சாந்தி


விரிமென் மலரின் நிறைவே

                        சாந்தி
 வினைசேர் கலையின் உயிரே 
                        சாந்தி

உருகும் அன்போ டுயிர்கட்

                     கென்றும்
 புரியும் பணியின் விளைவே 
                        சாந்தி

அரிதிற் பெறுதல் விறைவன்

                      புகழ்சேர்
 அடியின் கருணை நிழலே 
                        சாந்தி

திரையும் புனல்சூழ் உலகந்

                      தனிலே
 பரவும் படியாய்ப் புரிவோம் சாந்தி
    சாந்தி சாந்தி சாந்தி

பதுமத் துறைவோன் - புத்தன்.

             58