பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்ன கையின்

                            1

அன்னை கையின் விலங்ககன்ற
     அருமை நாளும் வந்தது:
 ஆடிப்பாடி வாழ்க வென்று
      அண்ட மெட்ட ஓதுவோம்.
 பொன்னின் மகுடம் இந்தியத்தாய்
      புனைந்த நாளும் வந்தது
 போற்றிப் பாடி ஜெய் ஹிந் தென்று
     பூமி யதிர முழங்குவோம்.

             2

பாரதத்தின் சிறுமை யெல்லாம்
    பஞ்சு போலப் பறந்ததே;
 பாருக் கெல்லாம் கண்ணிதென்று
    பகரும்நாளும் வந்ததே.
 வீர தீரம் அன்பு ஞானம்'
    மிகுந் திருக்கும் மக்கள் யாம்
 மெய்ம்மை நூல்கள் பலவுங் கண்ட
    மேலோர் வழியில் வந்தவர்.

             3

அடிமை வாழ்வில் நொந்த போது
    ஆன சிறுமைக் குறையெலாம்
 அகல வென்று திறமையோடு
    அற்புதங்கள் ஆற்றுவோம்.

              76