பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மகாத்மா வாழ்த்துவார்!

பாரதநாடே! உன்னுடைய பெண்மையின் இலட்சியம் சீதா தேவியும், சாவித்திரியும், தமயந்தியும் என்பதை மறவாதே! நீதொழும் தெய்வமாகிய உமாபதி யோகியரில் சிறந்த யோகி, தியாகியரில் சிறந்த சங்கரன் என்பதை மறவாதே. இந்தியனே ! உன் மனமும் பணமும் வாழ்வும் ஐம்புலன்களால் எய்தக்கூடிய இன்ட துன்பத்துக்காக ஏற்பட்டதல்ல: உன் ஒருவனுடைய சுய இன்பத்துக்காக ஏற்பட்டதல்ல என்பதை மறவாதே. அம்பிகையின் நைவேத்தியபீடத்தில் அவளுக்கு நிவேதனமாவதற்கே ஒவ்வோர் இந்தியனும் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை மறவாதே! ஜகன்மாதாவுடைய இயல்பின் பிம்பமே இந்தியாவின் சமூக அமைப்பு என்பதையும் மறவாதே, இழிந்தகுலத்தோடும், அறிவற்றவரும், வறியர்களும்: செருப்புத்தைப்போரும், தோட்டிகளும் உன்னுடன் இரத்த சம்பந்தம் உள்ள சோதரர் என்பதை நினைவு வைத்திரு!

இந்தியனே! நீ வீரனாவாய்; தீரனாவாய்; துணிவு பெறுவாய்; நீ ஓர் இந்தியன்; எல்லா இந்தியர்களும் என் உடன் பிறந்தான் , என்று பெருமையோடு, பறையறைவாய், அங்கவீனராயினும், அனாதையாயினும் எல்லோரும் உன் சோதரர் என்று கொள். அந்தணனாயினும் அரிஜனனாயினும் இந்தியர் யாவரும் என் சகோதரர்கள் என்று முழங்கு. எல்லா இந்தியனும் என் உடன் பிறந்தோர்; எல்லா இந்திய மக்களும் என் உயிர். இந்தியாவின் தேவ தேவிகளே நான் வழிபடும் தெய்வங்கள். இந்திய மக்கட்குலமே என் குழந்தைப் பருவத்தொட்டில். அதுவே என் வாலிபப் பருவத்தில்