பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


1. அணு குண்டு யுத்தம் ஏற்பட்டு, உலகில் உள்ள மக்கள் அனைவரும் மடிந்து மண்ணாகி, மனித நாகரிகம் அழிந்து, இவ்வுலகமே அணு விஷச் சாம்பல் நிறைந்து பாலைவனமாகிவிடலாம்.

2. அல்லது, வெளி கிரகங்களுக்குச் செல்வதில் போட்டா போட்டி ஏற்பட்டு, அந்தக் கிரகங்களில் அணு குண்டுகளை வெடிப்பதால், இந்த வானவெளியில் கிரங்களின் போக்கு, பாதிக்கப்பட்டு, உலகுக்கு அபாயம் ஏற்படலாம்.

3. அல்லது, அணு குண்டுகளை உற்பத்தி செய்வதில் பெரும் பணத்தைச் செலவிடுவதால், அதில் ஈடுபட்ட நாடுகள் திவாலாகி, உலகமே பெரும் சேரியாக மாறிவிடும். மக்கள் பீதி நிறைந்த கிறுக்கர்களாகி விடவும் கூடும்.

உலகத்தின் பொதுப்படையான அமைதியைச் சீரழிக்கவல்ல அணு குண்டு உற்பத்தியையும் சோதனைகளையும் ஐ. நா. மூலம் தடை செய்ய வேண்டுமென்றும், அத்தகைய வரம்புக் கொள்கையை ஏற்க மறுக்கும் நாடுகளை ஐ. நா. விலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்றும் முன்னாள், கவர்னர் ஜெனரல் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

ஆக, பலதரப்பட்ட சிந்தனையாளர்களின் கருத்துரைகள் வகுத்துக் காட்டும் பொது நல நோக்கை உலக நாடுகள் அனைத்தும் நன்கு உணர்ந்து, முனைப்புடன் செயற்பட்டால், இதன் நற்பலனாக, அணு ஆயுத வல்லரசுகள் மனம் திருந்தி நடக்க வாய்ப்பு ஏற்படாமல் தப்ப முடியாதல்லவா? இப்படிப்பட்ட விடிவு நிலை உதயமாகும் பொழுது, வல்லரசுகட்கு இடையே ஊடாடும் அவ நம்பிக்கை, ஆதிக்க வெறி, ஐயம், அச்சம் போன்ற