பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தென்னைமமரத் தீவினிலே...

சற்றுமுன் சமையற்காரரிடம் கூறியது நினைவிற்கு வந்தது. உண்மையிலேயே அவர் வெளியே சாப்பிட்டு விட்டாலும், என்னமோ அருணகிரியோடு சேர்ந்து மறுபடியும் சாப்பிட வேண்டும் போல் ஆசை எழுந்தது.

அருணகிரியோடு போனார். எல்லோரும் ஒன்றாய் சாப்பாட்டு மேஜையில் இருக்கும்போது பரமகுரு ஒரு தடவை எண்ணினார்; போன் விஷயத்தைச் சொல்லி விடலாமா என்று.

“ஏண்டா பரமு, சாப்பிடாமல் அப்படி உட்கார்ந்திருக்கிறாய்? பசி இல்லையா?” லட்சுமி அம்மாள் கவலையோடு கேட்டாள் அதன் பிறகு பெயருக்கு சாப்பிட்டுக் கொண்டே பரமகுரு, கல்யாணியைப் பார்த்து, “ஏன் மாமி எல்லா இடங்களையும் நன்றாகச் சுற்றிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

உடனே கல்யாணி, “ஏண்டா பரமு, உன் பொண்டாட்டியைக் கேட்பதற்கு பதில், இப்படிச் சுற்றி வளைத்து என்னைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாயா?” என்று கேட்டபோது எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள்

அப்போது தங்கமணி குறுக்கிட்டு, “மாமா! இன்னிக்கு நான் செத்துப் போயிடத் தெரிஞ்சேன்! அருணகிரி இல்லேன்னா என்னை நீங்க இப்போ உயிரோட பார்த்திருக்கவே முடியாது!” என்று