உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

117

வள்ளியம்மையினுடைய பணம்! அவள் காரியத்தை ஆரம்பியுங்கள் என்று பரமகுரு பிடிவாதமாகக் கொடுத்து அனுப்பினார்,” என்றான் குமரேசன்.

“அருணகிரி பரமகுருவுடன் இருக்கிறான்.” என்பதற்கு மேல் எந்தச் செய்தியுமே கனக விஜயன் காதில் விழவில்லை.

சரியாக ஆறு மணிக்கு தன் தாயார், மனைவி, கல்யாணி அம்மாள், அருணகிரி ஆகியோருடன் பரமகுரு காரில் வந்து சேர்ந்தார்.

வள்ளியம்மை இறந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டதால் அதற்கு மேலும் கால தாமதமாகாமல் காரியத்தை நடத்திவிட வேண்டுமென்பது தெருவில் உள்ள பெரியவர்களின் கருத்து. அதன்படி வள்ளியம்மையின் இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன.

உறங்குவது போல் நீண்டு படுத்திருந்த வள்ளியம்மையை அந்தக் கோலத்தில் கண்டதும், லட்சுமி அம்மாளுக்கும், பரமகுருவிற்கும் துக்கம் தாளவில்லை.

குமுறிக் குமுறி அழுதனர்.

அருணகிரி தாயின் மீது புரண்டு புரண்டு அழுதான். “நான் தான் அம்மா உன்னுடைய மரணத்திற்கே காரணம். நான் அவர்களோடு போக ஆசைப்பட்டது தவறு. உன்னை விட்டு நான் பிரிந்து போயிருக்கவே கூடாது. நீயாவது என்

தெ-8