உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தென்னைமரத் தீவினிலே...

னைப் போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியிருந்தால் நான் உன் வார்த்தையை மீறி போயிருக்க மாட்டேன்!” என்று அவன் மனதில் பட்டதையெல்லாம் கூறி அழுதான்.

வள்ளியம்மையின் உடல் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது விஜயனின் ஏராளமான நண்பர்கள் அதில் கலந்து கொண்டனர் பரமகுரு அருணகிரியை அனைத்தபடி அழைத்துச் சென்றார். லட்சுமி அம்மாள், காந்திமதி கல்யாணி எல்லோரும் காரிலேயே தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் தங்கி விட்டனர்.

இடுகாட்டில் வள்ளியின் உடலுக்கு அருணகிரி தீ மூட்டுகிற வேளையில் தூரத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது. வெளியே லட்சுமி அம்மாளின் கார் அருகே நின்று கொண்டிருந்த மாரியம்மாள் இதைப் பார்த்து விட்டாள்.

உடனே மாரியம்மாள் ஒரே ஒட்டமாக ஒடிச் சென்று விஜயனிடம் விஷயத்தைக் கூறிவிட்டுத் திரும்பினாள். விஜயன் இதை எதிர்பார்த்துத் தயாராய் வந்திருந்தான்.

அருணகிரி அழுது கொண்டே தீ மூட்டி விட்டு நிமிர்ந்தபோது-

விஜயன், தூரத்தில் போலீஸ் ஜீப் அருகே நிற்பதையும், அதிலிருந்து மூன்று பேர் துப்பாக்கி