120
தென்னைமரத் தீவினிலே...
கொண்டு விட்டோமே என்ற கவலைகள் அவரைப் பற்றிக் கொண்டன.
தங்கள் குடும்பத்தோடு இப்போது அருணகிரியைப் பற்றிய புதிய பொறுப்பும் சேர்ந்துள்ளது. இந்த வேளையில், அத்தனைபேரும் பத்திரமாக உயிரோடு ஊர் போய் சேர முடியுமா? என்பதே கேள்வியாக இருந்தது
சரியான பந்தோபஸ்துடன் புறப்படாவிட்டால், எந்தசமயத்திலும் அசம்பாவிதம் நிகழலாம். எதற்கும் யாரும் பொறுப்பாளிகள் அல்ல யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
அப்போது மாமாவிடம் இருந்து போன் வந்தது.
‘பரமு! இரண்டு நாட்களாக உனக்கு டிரை பண்ணிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய லைனைத் துண்டித்திருப்பதாக இங்கே எக்ஸ்சேஞ்சில் உள்ள பெண் கூறினாள். அவளிடம் சொல்லிவைத்திருந்தேன் இப்போது லைன் கிடைத்திருப்பதாக அவள் சொன்னதும் உடனே உன்னை கூப்பிட்டேன். நீங்கள் அங்கே எப்படி இருக்கிறீர்கள்? நான் இங்கு இருந்தாலும் அங்கு நடக்கிற கலவரங்களைப் பற்றியெல்லாம் தெளிவாக அவ்வப்போது தெரிந்துக் கொண்டுதான் இருக்கிறேன். தைரியமாக இருங்கள். இம்மாதிரி கலவரங்களைப் பலமுறை நான் சந்தித்திருக்கிறேன்