பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

131

இருந்தனர். அத்தனை பேரும் தோட்ட வேலைக்காரர்கள். அவர்களைத் தான் ஒழித்துக்கட்டி கொண்டிருந்தனர் கலவரக்காரர்கள். லிசியாவிற்கு புரிந்து விட்டது. இனி அவர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டுள்ள தன் கதி என்ன? தன்னை யாருக்கு தெரியும் தப்புவிக்க. ஐயோ இந்த பிள்ளை இந்த சமயத்திலா என்னிடம் வந்து சேர வேண்டும் என்றெல்லாம் பலவாறாக எண்ணிக் கொண்டிருந்தாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த அருணகிரியை அப்படியும் இப்படியும் அசைத்து எழுப்பினாள். வாசற் கதவு தட்டப்படும் ஓசை வர வர அதிகரித்தது.

லிஸியா வாயின்மேல் ஆள்காட்டி விரலை வைத்து மவுனமாக அருணகிரியை அழைத்துச் சென்று ஒரு பத்திரமான இடத்தில் ஒளித்துவிட்டு வந்து, கையில் குழந்தையை எடுத்துக் கொண்டபடி சென்று கதவைத் திறந்தாள்.

எதிரே இரண்டு ராணுவத்தினர்கள் நின்று கொண்டு, “உள்ளே யார் இருக்கிறார்கள்,” என்று கர்ஜித்தார்கள்.

“என்னையும் குழந்தையும் தவிர வேறுயாரும் இல்லை. என் கணவர் கூட இறந்துவிட்டார்.” என்று சிங்கள மொழியில் கூறினாள்.